அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அண்மையில் குறைக்கப்பட்ட நிலையில் உணவுப்பொதி மற்றும் தேநீர் ஒன்றின் விலை குறைப்பு

Prabha Praneetha
3 years ago
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அண்மையில் குறைக்கப்பட்ட நிலையில் உணவுப்பொதி மற்றும் தேநீர் ஒன்றின் விலை குறைப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் உணவுப்பொதி மற்றும் தேநீர் ஒன்றின் விலை குறைக்கப்படவுள்ளது.
 
எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அண்மையில் குறைக்கப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள சுமார் 60% உணவகங்கள் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு மத்தியில் செயற்பாடுகளை நிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

10% முதல் 15% வரையிலான விலை குறைப்பு திங்கட்கிழமை அமுல்படுத்தப்படும் என்றும் எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டதும் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4