சுற்றுலாத் துறைக்கு மட்டும் 10 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஒதுக்கப்படும்: ஹரின் பெர்னாண்டோ

Prathees
3 years ago
சுற்றுலாத் துறைக்கு மட்டும் 10 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஒதுக்கப்படும்: ஹரின் பெர்னாண்டோ

சுற்றுலாத்துறையில் ஈடுபடும் மக்களுக்கு எரிபொருளைப் பெறுவதற்காக நாடளாவிய ரீதியில் 10 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நெருக்கடி காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதால், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எனவே கடனை செலுத்துவதற்கு அவகாசம் வழங்குவது போன்ற நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4