போர் பயிற்சியில் ஈடுபடும் சீனா-முப்படைகளும் தயார் நிலையில் இருப்பதாக அறிவித்த தைவான்

#Thaiwan #China #War
Prasu
2 years ago
போர் பயிற்சியில் ஈடுபடும் சீனா-முப்படைகளும் தயார் நிலையில் இருப்பதாக அறிவித்த தைவான்

அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் சபாநாயகர் தைவான் நாட்டிற்கு செல்ல சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. அதையும் மீறி அவர்கள் தைவான் நாட்டிற்கு சென்றனர். இந்நிலையில், இதனை கண்டிக்கும் விதமாக தைவான் தீவை சுற்றி சீனா போர் பயிற்சி அளித்து வருகிறது.

இது பற்றி தைவானின் தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, தங்கள் நாட்டின் நீர் சந்தையில் சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறது. சீனாவின் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் பல தடவை தங்கள் எல்லை பகுதியை தாண்டியிருக்கின்றன.

எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்த ஒத்திகை செய்வது போன்று இந்த பயிற்சி உள்ளது. இதனைத் தொடர்ந்து எங்களின் முப்படைகளும் எச்சரிக்கப்பட்டிருக்கின்றன. வான் பாதுகாப்பு ஏவுகணைகளும் உஷாராக தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

எல்லையை தாண்டி வரும் சீன நாட்டின் விமானங்களை எச்சரிக்கும் விதமாக எங்கள் நாட்டுப் போர் விமானங்கள் பறக்க விடப்பட்டிருக்கின்றன என்று தெரிவித்திருக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!