ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட அல்கொய்தா தலைவருடைய சடலம் கிடைக்கவில்லை-தலிபான்
#Afghanistan
Prasu
2 years ago
அமெரிக்க நாட்டின் இரட்டை கோபுரத்தில் நடந்த தாக்குதலின் பின்னணியில் இருந்து இயங்கிய பின்லேடனுக்கு பிறகு அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவராக இருந்தவர் அய்மான் அல் ஜவாகிரி.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரில் அவர் மறைந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த மாதம் 31ஆம் தேதி அன்று ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
எனினும் அவரின் உடல் குறித்த தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தலீபான்கள் செய்தி தொடர்பாளரான சபியுல்லா முஜாகித் தற்போது வரை, அய்மான் அல் ஜவாகிரியின் சடலம் கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.