சீன கப்பல் விடயத்தில் இலங்கை அணிசேரா கொள்கையை பின்பற்றவேண்டும் - விமல் வீரவன்ச

Reha
2 years ago
சீன கப்பல் விடயத்தில் இலங்கை அணிசேரா கொள்கையை பின்பற்றவேண்டும் - விமல் வீரவன்ச

இலங்கை அணிசோரா கொள்கையை பின்பற்றவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரியுள்ளார்.

சீனக் கப்பலான யுவான் வாங் 5, ஹம்பாந்தோட்டைக்கு வருவதை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கம் சீனத் தூதரகத்திற்கு அறிவித்துள்ளமை தொடர்பிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

குறித்த கப்பலின் வருகைக்கு இந்திய அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இலங்கை அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்தநிலையில் இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்காக சீனாவுக்கான கதவை மூடுவது இலங்கையின் அணிசேரா கொள்கைக்கு இணங்குகிறதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையின் நெருக்கடியானது இந்தோ-பசிபிக் நிகழ்ச்சி நிரலுக்கு நாட்டை முற்றாக அடிபணியச் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

அத்துடன் இலங்கையை பலிகடா ஆக்குவதற்கு பசில் ராஜபக்ச தலைமையிலான பிரசாரத்தில் இருந்து தற்போதைய அரசாங்க நிர்வாகம் தப்பவில்லை என்று விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான தீர்மானங்கள் அன்றிலிருந்து ஒவ்வொரு இக்கட்டான தருணத்திலும் இலங்கைக்கு நட்புக் கரம் நீட்டிய நல்ல நண்பனான சீனாவுடன் இராஜதந்திர பிரச்சினைகளையே ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.