பிரித்தானியாவை அதிரவைத்த சம்பவம் 650 சிறார்களுக்கு நேர்ந்த கொடூரம்
பிரித்தானியாவில் விதிகளை மீறி சிறார்களை நிர்வாணப்படுத்தி சோதனைக்கு உட்படுத்திய விவகாரத்தில் பெருநகர பொலிஸார் கடும் விமர்சனத்தை எதிர்கொள்கின்றது.
குறித்த பகீர் சம்பவத்தை பிரித்தானியாவின் குழந்தைகள் ஆணையர் வெளிப்படுத்தியுள்ளார்.
பெருநகர காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் 2018 மற்றும் 2020 க்கு இடையில் 10 முதல் 17 வயதுடைய 650 சிறார்களை நிர்வாணப்படுத்தி சோதனை முன்னெடுத்துள்ளனர்.
15 வயது கறுப்பின சிறுமி ஒருவர் கிழக்கு லண்டனில் உள்ள தனது பள்ளியில் ஆடைகளை அகற்றி சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
குறித்த சிறுமி பாடசாலைக்கு கஞ்சா எடுத்துச் சென்றதாக சந்தேகிக்கப்பட்ட நிலையிலேயே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த விவகாரம் கடும் விமர்சனத்தை எதிர்கொண்ட நிலையில், சிறப்பு அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணையிலேயே இதேப்போன்று 650 சிறார்கள் பா திக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
நிர்வாணப்படுத்தி சோதனைக்கு உட்படுத்தப்படும் ஒரு குழந்தையின் உளவியல் பாதிப்பு தொடர்பில் எவரும் கருத்தில் கொள்வதில்லை எனவும், அந்த குழந்தைக்கு அது அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கும் எனவும் சிறார்களுக்கான ஆணையர் Dame Rachel de Souza தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், அவசரச் சூழ்நிலைகளைத் தவிர, பொருத்தமான வயது வந்தோர் ஆஜராக வேண்டும் என்பது சட்டப்பூர்வ தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று வருட காலத்தில் 650 சிறார்கள் நிர்வாண சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 58% சிறார்கள் க ருப்பினத்தனவர்கள் எனவும் வெளியான தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, முதலில் ஏன் இவ்வளவு சிறார்களுக்கு நிர்வாண சோதனை முன்னெடுக்கப்படுகிறது என குழந்தைகள் ஆணையர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்த சோதனையில் இலக்கானவர்களில் 5-ல் ஒருவருக்கு எந்த இடத்தில் சோதனை முன்னெடுக்கப்பட்டது என்ற தகவலும் தெரியவில்லை என்பது மர்மமாகவே உள்ளது என சிறார்களுக்கான ஆணையர் Dame Rachel de Souza தெரிவித்துள்ளார்.