உக்ரைன் துறைமுகங்களில் இருந்து லெபனானுக்கு செல்லும் 4 தானிய கப்பல்

#Ukraine
Prasu
2 years ago
உக்ரைன் துறைமுகங்களில் இருந்து லெபனானுக்கு செல்லும் 4 தானிய கப்பல்

ரஷியா-உக்ரைன் ஒப்பந்தத்தின் கீழ் உக்ரைன் துறை முகங்களில் இருந்து மேலும் 4 தானிய கப்பல்கள் இன்று லெபனானுக்கு செல்கிறது. 

ரஷியா-உக்ரைன் போர் காரணமாக உலகில் 4.7 கோடி பேர் பசியால் வாடும் அபாயம் இருப்பதாக ஐ.நா. சபை எச்சரித்தது. 

இதையடுத்து உக்ரைனில் இருந்து தானியக் கப்பல்களை கருங்கடல் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்ப வழிவகை செய்யும் ஒப்பந்தம் ரஷியா-உக்ரைன் இடையே ஐ.நா. சபை மற்றும் துருக்கி முன்னிலையில் கடந்த மாதம் கையெழுத்தானது. 

அதன் கீழ் உக்ரைனில் இருந்து முதல்முறையாக உணவு தானிய கப்பல் லெபனானை நோக்கி கடந்த 1-ந்தேதி புறப்பட்டது. 

இந்த நிலையில் மேலும் 4 கப்பல்கள் உக்ரைன் துறை முகங்களில் இருந்து இன்று லெபனானுக்கு செல்கிறது. 

இதன் மூலம் பசியால் வாடும் 4.7 கோடி பேரின் துயரை துடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.