உக்ரைனிய பெண்களும் குழந்தைகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கடத்தப்படுவதாக பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை

#Ukraine
Prasu
2 years ago
உக்ரைனிய  பெண்களும் குழந்தைகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கடத்தப்படுவதாக பாதுகாப்பு நிபுணர்கள்  எச்சரிக்கை

கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா மிருகத்தனமான படையெடுப்பை தொடங்கியதிலிருந்து மில்லியன் கணக்கான உக்ரேனியர்கள் உயிருக்கு அஞ்சி அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் அகதிகளாக வெளியேறியுள்ள மக்கள் பாலியல் அடிமைகளாக கடத்தப்படும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். போலந்து நாட்டின் அகதிகள் முகாமில் சிக்கியுள்ள உக்ரைனிய மக்களை அந்த கும்பல் குறிவைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் ரஷ்யாவுக்கு வலுக்கட்டாயமாக கொண்டு செல்லப்பட்ட பெரும்பாலான மக்கள் தான் பெருமளவில் குறிவைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் ஐந்து மாதங்களாக தொடர்ந்து நடக்கும் இந்த படையெடுப்பிலிருந்து சுமார் 200,000 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அச்சம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உக்ரைனிலிருந்து வெளியேறி மாயமாகியுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கடத்தப்பட்டிருக்கலாம் என அமெரிக்காவிலிருந்து வெளியான ஆய்வறிக்கை ஒன்று அதிர்ச்சி தகவலை வெளிக்கொண்டு வந்துள்ளது. மேலும் உக்ரைன் மீதான போரால் பல ரஷ்ய செல்வந்தர்கள் அரபு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், அவர்களுக்கு ரஷ்ய மொழி பேசும் ஊழியர்கள் மற்றும் பணியாட்கள் தேவைப்படுவதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு போர் தொடங்கிய முதல் பத்து நாட்களில் உக்ரைனிலிருந்து 1.5 மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் அண்டை நாடுகளுக்கு சென்றதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மேலும், துபாய் மாகாணத்தில் சிக்கும் அகதிகள் பெரும்பாலானோர் பாலியல் தொழிலுக்கும், கொத்தடிமைகளாகவும் பயன்படுத்தப்படுவதாக புதிய ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.