வடகொரியாவில் கொரோனா தொற்று முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - கிம் ஜாங் உன்

Kanimoli
3 years ago
வடகொரியாவில் கொரோனா தொற்று முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - கிம் ஜாங் உன்

வடகொரியாவில் கொரோனா தொற்று முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் கொரோனா தொற்று தொடர்பான செய்திகள் எதுவும் வெளிவராத நிலையில் கிம் ஜாங் உன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், " வடகொரியாவில் கொரோனாவுக்கு எதிராக நடந்த போரில் அமோக வெற்றி பெற்றுள்ளோம். நாட்டு மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும், விடாமுயற்சியுமே இந்த வெற்றிக்கு காரணம். இதற்கு காரணமானவர்களை பாராட்டுகிறேன் " எனக் குறிப்பிட்டார்.

வடகொரியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், வடகொரியாவின் கொரோனா இறப்புகள் குறித்து தெளிவான தகவல் எதுவும் வெளியாகவில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கடந்த மே மாதம் இங்கு ஒமைக்ரான் பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. தலைநகர் பியோங்யாங்கில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

இவ்வாறிருக்க, வடகொரியாவில் கொரோனா தொற்று முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வடகொரியா அதிபர் அறிவுப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4