பிரபல ஆண்கள் பாடசாலையொன்றில் மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்

Nila
3 years ago
பிரபல ஆண்கள் பாடசாலையொன்றில் மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்

காலியில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையொன்றில் பல மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் 9 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உனவடுன, மெதரம்ப சதாரா மகா தேவலாயாத்தின் படகொடகே வெஸ்லி கீர்த்தி குமார என்பவரே இவ்வாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேகநபரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர் இந்த பாலியல் நடவடிக்கைகளை படம்பிடித்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஒன்பது பேரை அடையாளம் கண்டு அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.

அதன் படி, சந்தேகநபர் பாதிக்கப்பட்டவர்களை அத்துருகிரியவில் உள்ள தனக்குச் சொந்தமான வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரை பணத்தை சந்தேக நபர் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்யச் சென்றபோது அவர்களுக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

மேலும், அவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் காலியில் உள்ள பல சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்கள் அவரை விடுவிக்க தலையிட முயற்சித்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4