பிரித்தானியாவில் அதிகரிக்கும் வெப்பம் நள்ளிரவு முதல் தீவிரமான வெப்ப அலை

Kanimoli
2 years ago
பிரித்தானியாவில் அதிகரிக்கும் வெப்பம்    நள்ளிரவு முதல் தீவிரமான வெப்ப அலை

பிரித்தானியாவில் வெப்பம் அதிகரித்து வருவதுடன், மழையும் குறைவாக உள்ளதால் ஆறுகளும் குளங்களும் வறண்டுவருகின்றன.

இதன்படி சில பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு தீவிர வெப்ப அலையின் தாக்கம் நிலவும் எனவும் வெப்பநிலையானது 37 பாகை செல்சியஸ் வரை உயர்வடையும் எனவும் வானிலை அவதான நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தெற்கு மற்றும் மத்திய இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தீவிரமான வெப்ப அலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

பச்சைப் பசேல் என காட்சியளிக்கும் வயல்களும் பூங்காக்களும் காய்ந்து மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன. அதைத் தொடர்ந்து தண்ணீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் நாளை பிரித்தானியாவில் அதிகாரபூர்வமாக வறட்சி பிரகடனம் செய்யப்படும் என எதிர்பார்ப்பதாக பிபிசி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இந்த வெப்ப அலையானது உடல்நலம், போக்குவரத்து மற்றும் பணி நிலைமைகளை பாதிக்கும் எனவும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. கடந்த ஜுலை மாதம் முதல் முறையாக பிரித்தானியாவில் சூழல் வெப்பநிலையானது 40 பாகை செல்சியஸ் என்ற சாதனை மட்டத்தை எட்டியிருந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!