யாழில் விசமிகளின் ஈவிரக்கமற்ற செயல்

Kanimoli
3 years ago
யாழில் விசமிகளின் ஈவிரக்கமற்ற செயல்

  யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் மேய்ச்சலுக்கு கட்டப்பட்டு இருந்த பசு மாடொன்றின் காலை விஷமிகள் துண்டாடியதுடன், மற்றுமொரு காலிலும் காயத்தை ஏற்படுத்தியுள்ள சம்பம் ந்று இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் வட்டுக்கோட்டை மூளாய், முன்கோடை பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது வாழ்வாதாரத்திற்காக பசு மாடுகளை வளர்த்து வரும் நிலையில் வழமை போன்று தனது பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் பசுவை மேய்ச்சலுக்காக கட்டியுள்ளார்.

மாடுகளை அவிழ்க்க சென்ற போது பசுவின் கால் ஒன்று துண்டாடப்பட்ட நிலையில் மற்றுமொரு காலில் காயம் ஏற்படும் வகையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இரத்த வெள்ளத்தில் மாடு கிடந்துள்ளது.

மாட்டினை அங்கிருந்து மீட்ட போதிலும் மாடு வலியினால் உணவு உட்கொள்ளாது இருந்த நிலையில் அது தொடர்பில் வட்டுக்கோட்டை கால் நடை வைத்திய அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் மாட்டின் உரிமையாளர் முறைப்பாடு அளித்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடவுளென போற்றப்படும் பசுமாட்டை இவ்வாறு ஈவிரக்கமற்று காலை வெட்டியவர்கள் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கடும் விசன வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை அண்மையில் யாழில் நாயொன்றினை கொடூரமாக கொன்று காணொளி வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4