இலங்கை திருகோணமலை மாவட்டத்தில் வீடற்ற சகோதரி ஒருவருக்கு ஆதிபராசக்தி அறப்பணிமையத்தின் 36 வது ஓம்சக்தி இல்லம் கையளிப்பு

Prasu
3 years ago
இலங்கை திருகோணமலை மாவட்டத்தில்  வீடற்ற சகோதரி ஒருவருக்கு ஆதிபராசக்தி அறப்பணிமையத்தின் 36 வது ஓம்சக்தி இல்லம் கையளிப்பு

இன்றையதினம்   12.08.2022 இலங்கை திருகோணமலை மாவட்டத்தில் உதயபுரி எனும் இடத்தில் வாழ்ந்துவந்த ஓர் வீடற்ற சகோதரி ஒருவருக்கு இந்தப் பொருளாதார நெருக்கடி நிறைந்த காலத்தில் மிகுந்த பிரயாசைப்பட்டு இந்த வீடு கையளிக்கப்படுகுறது. 

இதற்கான நிதியனைசரணையினை சுவிற்சர்லாந்து பேர்ன் மாவட்டத்தில் வசிக்கும் சுவிஸ் மன்ற சக்திகளான திரு , திருமதி ஶ்ரீதரன் சுஜமதி தம்பதிகள் வழங்கியிருந்தனர் . ஏற்கனவே ஒரு வீட்டைக்கட்டி ஒரு குடும்பத்தை வாழவைத்து அழகுபார்த்த இத்தம்பதியினர் 2 வது வீட்டையும் கட்டி வழங்குவதற்கு நிதியுனை வழங்கிட முன்வந்ததையிட்டு இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் . 

இவ்வரிய அறப்பணியை முன்னின்று செயற்படுத்திய எமது ஆதிபராசக்தி அறப்பணி மையத்தின் திருகோணமலை மாவட்ட  பொறுப்பாளர் சக்தி திருச்செந்தூரன் அவர்களுக்கும் அவருடனான அறப்பணியாளர்களுக்கும்  பாராட்டுக்களும் , வாழ்த்துக்களும்

அம்மாவின் பேரருள் அனைவர்க்கும் கிடைத்து தர்மமும் , பக்தியும்வளர்க்கும் அன்னை ஆதிபராசக்தியின் அருளையம் ,அருட்திரு அம்மாவின் குருவருளையும் பேரன்போடு பற்றிக்கொண்டு அன்புவழியில் அவள் பாதம்பணிகிறோம் . 
ஓம் சக்தி! ஆதிபராசக்தி!!

அன்புடன் :
சக்தி சுவிஸ் சுரேஷ் 
மே.அ.ஆ.சி.க.ச.ப
அறப்பணிமையம் -சுவிஸ் (நிறுவனர்)

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4