நியூயார்க்கில் துணிகரம் - எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல்

#Newyork #Attack
Prasu
2 years ago
நியூயார்க்கில் துணிகரம் - எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். 

இந்நிலையில், நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி இன்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேடையில் விரிவுரை அளிக்க இருந்தபோது திடீரென மர்ம நபர் ஒருவர் சல்மான் ருஷ்டியை நோக்கிச் சென்றார். 

தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தில் குத்தினார். இதில் நிலைகுலைந்த சல்மான் ருஷ்டி தரையில் விழுந்தார். 

அதன்பின், மருத்துவ ஹெலிகாப்டரில் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். உடனே அங்கிருந்தவர்கள் கத்தியால் குத்திய நபரை தடுத்து நிறுத்திப்பிடித்தனர். 

போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!