ரூ.55 ஆயிரம் கோடிக்கு டெஸ்லா பங்குகளை விற்ற டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க்

#ElonMusk
Prasu
2 years ago
ரூ.55 ஆயிரம் கோடிக்கு டெஸ்லா பங்குகளை விற்ற டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க்

உலக பெரும் பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை சமீபத்தில் கைவிட்டார். 

இந்த முடிவை எதிர்த்து டுவிட்டர் நிறுவனம் கோர்ட்டில் வழங்கு தொடர்ந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் 8.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள டெஸ்லா பங்குகளை எலான் மஸ்க் விற்றார். 

இதன் இந்திய மதிப்பு ரூ.67 ஆயிரம் கோடி ஆகும். இந்தநிலையில் தற்போது எலான் மஸ்க் மீண்டும் 7 பில்லியன் டாலர் பங்குகளை விற்றுள்ளார். 

இதன் இந்திய மதிப்பு ரூ.55ஆயிரம் கோடி ஆகும். ஒருவேளை டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் குறைந்த விலையில் டெஸ்லா பங்குகளை விற்க வேண்டிய சூழ்நிலையை தவிர்க்க தற்போது விற்பனை செய்ததாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

ஆகஸ்டு 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை டெஸ்லா நிறுவனத்தின் சுமார் 79 லட்சத்துக்கும் மேற்பட்ட பங்குகளை அவர் விற்றுள்ளார்.