கைவிடப்பட்டுள்ள எண்ணெய் களஞ்சியங்களை பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது

Kanimoli
2 years ago
கைவிடப்பட்டுள்ள எண்ணெய் களஞ்சியங்களை பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது

பொலன்னறுவை மற்றும் வெலிகந்தை பிரதேசங்களில் கைவிடப்பட்டுள்ள எண்ணெய் களஞ்சியங்களை பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன இதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

பொலன்னறுவை புகையிரத நிலையம், வெலிகந்தை புகையிரத நிலையப் பகுதிகளில் அமைச்சர் பந்துல குணவர்த்தன கண்காணிப்பு விஜயமொன்றை நேற்றைய தினம் மேற்கொண்டார்.

இதன் போது, அங்கு கைவிடப்பட்டிருந்த இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான எண்ணெய் களஞ்சிய தாங்கிகள் குறித்து கவனம் செலுத்தியதுடன், அவற்றை மீளச் சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போதைக்கு புதர்கள் மற்றும் காட்டுக்குள் கைவிடப்பட்டுள்ள குறித்த தாங்கிகளில் பொலன்னறுவை அருகே மூன்று லட்சம் லீட்டர் எரிபொருள் மற்றும் வெலிகந்தை அருகே இரண்டு லட்சத்து எழுபதாயிரம் லீட்டர் எரிபொருள் சேமித்து வைக்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.