தனியார் பேருந்து சேவை மட்டுப்படுத்தபடும் - இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்கம்

Kanimoli
3 years ago
 தனியார் பேருந்து சேவை மட்டுப்படுத்தபடும் - இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்கம்

வார இறுதியில் தனியார் பேருந்து சேவை மட்டுப்படுத்தபடுமென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் படி இன்று 50 வீத பேரூந்துகளே சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இருப்பினும் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை 75 வீதமான தனியார் பேருந்துகளே சேவையில் ஈடுபடுத்தப்பட்டன எனவும் குறிப்பிட்டார்.

இன்று எரிபொருள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமை போன்று பேருந்து சேவைகளை முன்னெடுக்க முடியும் என எதிர்பார்ப்பதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4