குழந்தைகளின் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துமாறு மருத்துவர்களின் வேண்டுகோள்

Prathees
2 years ago
குழந்தைகளின் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துமாறு மருத்துவர்களின் வேண்டுகோள்

இந்த காலகட்டத்தில் குழந்தைகளின் உடல்நலம் குறித்து பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

கொரோனா நோயாளர்களுக்கு முதல் இரண்டு நாட்களில் அதிக காய்ச்சல் இருப்பதால், அவ்வாறான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென பொரளை லேடி ரிட்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தவிர டெங்கு மற்றும் இன்புளுவன்சா நோயாளர்களும் உள்ளதாக விசேட வைத்திய நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

  மேலும், ஹெபடைடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அதிகரிப்பு கடந்த வாரமும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் நாளை முதல் வாரத்தின் ஐந்து நாட்களிலும் நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.