குரங்கு அம்மை மாறுபாடுகளுக்கு புதிய பெயர் சூட்டிய உலக சுகாதார அமைப்பு

#MonkeyPox #WHO
Prasu
2 years ago
குரங்கு அம்மை மாறுபாடுகளுக்கு புதிய பெயர் சூட்டிய  உலக சுகாதார அமைப்பு

கொரோனா தொற்றுக்கு மத்தியில் குரங்கு அம்மையும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 89 நாடுகளில் 27 ஆயிரத்து 814 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

1958-ம் ஆண்டு முதன்முதலாக கண்டறியப்பட்டபோதுதான் இந்த நோய்க்கு குரங்கு அம்மை என்று பெயர் சூட்டப்பட்டது. 

இந்த நிலையில், குரங்கு அம்மை மாறுபாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு புதிய பெயர்களை சூட்டி உள்ளது.

 மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள குரங்கு அம்மை மாறுபாடுகளுக்கு கிளேட் 1, மேற்கு ஆப்பிரிக்காவில் கிளேட் 2 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கிளேட்-2 வைரஸ், 2 துணை வைரஸ்களை கொண்டுள்ளது. 

அவை கிளேட் 2-ஏ, கிளேட் 2-பி என அழைக்கப்படும். உலகளாவிய நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து இந்தப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. 

தற்போது உலகளவில் பரவி வருவது கிளேட் 2-பி வைரஸ் ஆகும். புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள வைரஸ்கள், தொடர்புள்ள நோய்கள் மற்றும் வைரஸ் மாறுபாடுகள் எந்தவொரு கலாசார, சமூக, தேசிய, பிராந்திய தொழில் முறை மற்றும் இனக்குழுக்களுக்கு தீங்கு ஏற்படுத்துவதைத் தவிர்க்கிற வகையிலும், வர்த்தக சுற்றுலா, சுற்றுலா அல்லது பிராணிகள் நலனில் எதிர்மறை விளைவுகளை குறைக்கும் விதத்திலும் இந்தப் பெயர்களால் அழைக்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!