6 வயது சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய துபாய் போலீசார்

Prasu
2 years ago
6 வயது சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய துபாய் போலீசார்

துபாய் நகரில் ஹூத் ஹத்தாத் என்ற அரபு நாட்டைச் சேர்ந்த 6 வயது சிறுமி தனது பெற்றோருடன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். 

அவர் தனது பிறந்த நாள் அன்று போலீஸ் அதிகாரியாக வேண்டும் என பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்தார். இதனையடுத்து அவர்களின் பெற்றோர் தங்களது மகளின் விருப்பத்தை எவ்வாறு நிறைவேற்றுவது? என நினைத்து வந்தனர். 

இதனை தொடர்ந்து அவர்கள் போலீஸ் தலைமையகத்துக்கு தனது மகளின் விருப்பத்தை இ-மெயில் மூலம் அனுப்பினர். 

இதனை பரிசீலனை செய்த அதிகாரிகள் சிறுமியின் பிறந்த நாள் ஆசையை நிறைவேற்ற உறுதியளித்தனர். 

இதையடுத்து சிறுமியின் பிறந்தநாளான நேற்று போலீஸ் அலுவலகத்துக்கு சீருடையில் வந்தார். அவரை போலீஸ் அதிகாரிகள் வரவேற்று பூங்கொத்து வழங்கினர். 

மேலும் பிறந்த நாளையொட்டி சிறுமிக்கு பரிசு அளித்து மகிழ்ச்சிபடுத்தினர். பின்னர் போலீஸ் அதிகாரி இருக்கையில் அமர வைத்தனர். 

அப்போது போலீஸ் துறையில் உள்ள பல்வேறு வகையான பணிகள் குறித்தும் சிறுமிக்கு தெரிவித்தனர். மேலும் போலீஸ் அலுவலகத்தின் ஒவ்வொரு பகுதியினையும் அழைத்து சென்று காண்பித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!