மற்றொரு டீசல் கப்பல் நாட்டை வந்தடைய உள்ளது

Kanimoli
3 years ago
மற்றொரு டீசல் கப்பல் நாட்டை வந்தடைய உள்ளது

இன்னும் சில நாட்களில் மற்றொரு டீசல் கப்பல் நாட்டை வந்தடைய உள்ளது.

இந்நிலையில் 30,000 மெற்றிக் தொன் டீசல் கப்பலொன்று இவ்வாறு இலங்கைக்கு வரவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நேற்று இரவு நாட்டை வந்தடைந்த கச்சா எண்ணெய் கப்பலின் மாதிரி பரிசோதனை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாதிரிகளை பரிசோதித்த பிறகு, கப்பலில் எரிபொருள் இறக்கும் பணி ஆரம்பிக்கப்படும்.

மேலும் கச்சா எண்ணெய் இறக்கப்பட்டதன் பின்னர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளும் ஆரம்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4