சுமார் 741 சிசு செரிய பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்

Kanimoli
3 years ago
சுமார் 741 சிசு செரிய பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்

பாடசாலை மாணவர்களுக்காக இன்று (15) முதல் 'சிசு செரிய' உள்ளிட்ட அனைத்து பேருந்துகளும் திட்டமிட்ட நேர அட்டவணையின் பிரகாரம் சேவையில் ஈடுபடுமென இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

சுமார் 741 சிசு செரிய பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.

எந்தவொரு சிக்கலும் இன்றி, மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்குத் தேவையான பேருந்து சேவைகளை அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கி முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே, இன்று (15) முதல் 90 தொடக்கம் 95 வீதமான பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

எவ்வாறாயினும், பாடசாலை சேவைகளை முன்னெடுப்பதற்கு போதுமான எரிபொருள் கிடைக்கவில்லை என அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல்ஶ்ரீ சில்வா குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4