சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட 4,000 லீற்றர் பெற்றோலுடன் ஒருவர் கைது

Mayoorikka
3 years ago
சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட 4,000 லீற்றர் பெற்றோலுடன் ஒருவர் கைது

புத்தளம் - குருநாகல் வீதியின் கல்வடிய பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் 4,000 லீற்றர் பெற்றோல் கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், ஆனமடுவ பிரதேசத்தில் இருந்து மன்னார் நோக்கி பெற்றோலை லொறியில் ஏற்றிச் சென்றதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மன்னார் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் எனவும், அவருக்கு சட்டவிரோதமான முறையில் பெற்றோல் விநியோகித்த பவுசரை ஆனமடுவ பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4