ஜெருசலேம் நகரில் பஸ் மீது சராமாரி துப்பாக்கி சூடு கர்ப்பிணி உள்ளிட்ட 8 பேர் படுகாயம்
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ஜெருசலேம் நகரில் யூதர்களின் புனித தளங்களின் ஒன்றான மேற்கு சுவர் அமைந்துள்ளது. இங்கு ஆயிரம் கணக்கானோர் ஆண்டு தோறும் பிரார்த்தனை செய்ய பயணம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை மேற்கு சுவரில் பிரார்த்தனையை முடித்துவிட்டு யாத்ரீகர்கள் பஸ்ஸில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர் ஒருவர் அந்த பஸ் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இந்த தாக்குதலில் பஸ்ஸில் இருந்த ஒரு கர்ப்பிணி உள்ளிட்ட 8 படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பகுதி முழுவதையும் சுற்றி வளைத்து தங்களின் பாதுகாப்பு வளைத்துகுள் கொண்டு வந்தனர். இருப்பினும் போலீசார் வருவதற்குள் தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
அதனை தொடர்ந்து போலீசார் படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் அவர்களில் கர்ப்பிணி உள்ளிட்ட 2 நபரின் நிலைமை கவலைகிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்குகிடையில் பஸ் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர் தாமாக போலீசில் சரணடைந்ததாகவும், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.