பீகாரில் ராக்கி கயிறு கட்ட சென்ற சிறுமி மீது கூட்டு பாலியல் வன்கொடுமை

#Sexual Abuse
Prasu
2 years ago
பீகாரில் ராக்கி கயிறு கட்ட சென்ற சிறுமி மீது  கூட்டு பாலியல் வன்கொடுமை

பீகார் மாநிலம் சிவான் மாவட்டம் சண்ட்ஹனி கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை ரக்‌ஷபந்தன் தினத்தன்று தனது உறவினர் தனது உறவுக்கார சகோதரனுக்கு ராக்கி கயிறு கட்ட சிறுமி சென்றுள்ளார். சகோதரனின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த அந்த சிறுமியை பின் தொடர்ந்து வந்த அந்த கிராமத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் சிறுமியை கடத்தி சென்றனர்.

ஆள்நடமாட்டமற்ற சாலையோரம் சிறுமியை இழுத்து சென்ற அந்த கும்பல் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது, சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அந்த சாலை வழியாக காரில் வந்த நபர் காரை நிறுத்திவிட்டு அங்கு சென்றுள்ளார். இதனால், சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. இதனை தொடர்ந்து படுகாயங்களுடன் சிறுமியை மீட்ட அந்த நபர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய பவன்குமார், அங்கித்குமார், தினேஷ்குமார், இமாமுதீன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.

இதில் தலைமறைவான 4 பேரில் ஒருவன் மட்டும் இது வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 3 பேரை பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ரக்‌ஷாபந்தன் தினத்தன்று சகோதரனுக்கு ராக்கி கயிறு கட்ட சென்ற சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக போதை பொருளுக்கு அடிமையானவர்களும், போதைக்கு அடிமையானவர்களும் ஆள்நடமாட்டமற்ற சாலைகளில் சுற்றித்திரிந்து அவ்வழியாக செல்லும் பெண்கள், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!