சிகிச்சைக்கு பிறகு அடுத்த மாதம் நாடு திரும்பவுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்

#Pakistan
Prasu
2 years ago
சிகிச்சைக்கு பிறகு அடுத்த மாதம் நாடு திரும்பவுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரான அவர் மீது பனாமா ஊழல் உள்பட பல்வேறு வழக்குகள் கோர்ட்டில் தொடரப்பட்டன. 

கடந்த 2018-ம் ஆண்டு நவாஸ் ஷெரீப்புக்கு ஒரு வழக்கில் 7 ஆண்டு ஜெயிலும், மற்றொரு வழக்கில் 11 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது. 

இதற்கிடையே உடல்நல பாதிப்புக் காரணமாக லண்டன் சென்று சிகிச்சை பெற லாகூர் கோர்ட்டில் அனுமதி கேட்டார். அவரது தண்டனையை நிறுத்தி வைத்து கோர்ட்டு லண்டன் செல்ல அனுமதி அளித்தது. 

இதையடுத்து 2019-ம் ஆண்டு நவாஸ் ஷெரீப் லண்டன் சென்றார். அதன் பின் அவர் நாடு திரும்பவில்லை. 

இதற்கிடையே பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷபாய் ஷெரீப் புதிய பிரதமாக பொறுப்பேற்றார். 

நவாஸ் ஷெரீப்பின் பாஸ்போர்ட் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காலாவதியான பின்பு, அதனை புதுப்பிக்க அப்போது ஆட்சியில் இருந்த இம்ரான் கான் அரசு மறுத்து விட்டது. 

தற்போது நவாஸ் ஷெரீப்புக்கு புதிய பாஸ்போர்ட்டை ஷபாஸ் ஷெரீப் அரசு வழங்கியது. இதையடுத்து நவாஸ் ஷெரீப் லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியானது.