ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து சீனக்கப்பல் புறப்படும் திகதி பற்றி வெளியான தகவல்

Prathees
2 years ago
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து சீனக்கப்பல் புறப்படும் திகதி பற்றி வெளியான தகவல்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் செண்டு யுவான் வாங் 5 சீனக் கப்பல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மாத்திரம் தங்கியிருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் தொடர்பான சர்ச்சைக்குரிய சூழ்நிலையை அடுத்துஇ இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கப்பலை பார்வையிட அனுமதி வழங்கியது.

நேற்றிலிருந்து எதிர்வரும் 22ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்க முடியும் எனத் தெரிவிக்கின்றனர்.

ஆனால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து கப்பல் 19ஆம் திகதி புறப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யுவான் வாங் 5 கப்பல்இ கப்பலுக்கான எரிபொருள் மற்றும் உணவு போன்ற பொருட்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்ததாக துறைமுக மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 04 நாட்கள் குறுகிய காலம் தங்கியுள்ள இந்தக் கப்பல் தொடர்பில் 03ம் தரப்பினரின் தலையீடு தேவையற்றது எனவும் சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்தக் கப்பலின் இலங்கைப் பயணத்தை இந்தியாவும் அமெரிக்காவும் உன்னிப்பாக கவனித்து வரும் பின்னணியில் சர்ச்சையை ஏற்படுத்திய யுவான் வாங் 5 என்ற சீன கப்பல் நேற்று காலை இலங்கையை வந்தடைந்தது.

சீனாவின் செயற்கைக்கோள் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பலான இந்த அதிநவீன தொழில்நுட்பக் கப்பல்இ அம்பாந்தோட்டை துறைமுகத்தை கடந்த 11ஆம் திகதி வந்தடையத் திட்டமிடப்பட்டிருந்தது.