இலங்கையில் இரண்டு புதுப்பிக்கத்தக்க திட்டங்களுக்கு அதானி நிறுவனத்திற்கு அனுமதி

Prathees
2 years ago
இலங்கையில் இரண்டு புதுப்பிக்கத்தக்க திட்டங்களுக்கு அதானி நிறுவனத்திற்கு அனுமதி

இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு இலங்கையில் இரண்டு காற்றாலை மின் திட்டங்களுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்

அந்த நிறுவனத்திற்கு 500 மில்லியன் அமெரிக்கடொலர்களுக்கு மேல் முதலீடு செய்ய தற்காலிக அனுமதி வழங்கப்பட்டது.

இது மன்னார் மற்றும் புனரின் பகுதிகளில் இரண்டு காற்றாலை திட்டங்களுக்காக அனுமதி வழங்கப்பட்டது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை மின்சார சபை மற்றும் நிலையான அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

மின்சார சட்டத் திருத்தத்தினால் தாமதமாகியுள்ள 46 திட்டங்களில் 21 திட்டங்களுக்கு அடுத்த வாரம் எட்டப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.