ரஞ்சன் ராமநாயக்கவை ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் இந்த வாரம் விடுதலை செய்ய தீர்மானம்

Prasu
3 years ago
ரஞ்சன் ராமநாயக்கவை ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் இந்த வாரம் விடுதலை செய்ய தீர்மானம்

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் நான்கு வருட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்க பெரும்பாலும் இந்த வாரத்தில் விடுதலை செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அதற்கான அனைத்து ஆவணங்களும் உரிய தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றத்தை அவமதித்ததாக ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான வழக்கின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு 2021 ஜனவரி 21 ஆம் திகதி அறிவிக்கப்பட்டதுடன், தீர்ப்பின் படி அவருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4