குரங்கம்மை அச்சத்தால் குரங்குகளை கொல்லும் மக்கள் - பெயரை மாற்ற WHO தீர்மானம்

#MonkeyPox #WHO
Prasu
2 years ago
குரங்கம்மை அச்சத்தால் குரங்குகளை கொல்லும் மக்கள் - பெயரை மாற்ற WHO தீர்மானம்

குரங்கம்மை நோய்க்கு புதிய பெயர் வைக்க உலக சுகாதார மையம் முடிவு செய்துள்ளது. ஆப்பிரக்காவில் கண்டறியப்பட்ட குரங்கம்மை நோயால் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த குரங்கம்மை நோய் சர்வதேச சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. சமீப காலமாக குரங்கம்மை நோயின் பெயர் பாரபட்சமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.

இது மட்டுமின்றி 1958 ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டில் தான் முதல் முதலாக குரங்கு வைரஸ் நோய் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த நோய் காரணமாக ஏராளமான குரங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பல குரங்குகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதை போல சமீபத்தில் பிரேசிலில், நோய் பயத்தால் மக்கள் குரங்குகளுக்கு விஷம் வைத்து கொன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் உடனடியாக குரங்கம்மை நோய்க்கு புதிய பெயர் வைக்க உலக சுகாதார மையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, குரங்கம்மை என்ற பெயருக்கு மாற்றாக வேறு பெயரை பொதுமக்கள் பரிந்துரைக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.