இலங்கைக்கான விமானங்களின் எண்ணிக்கை 108 இல் இருந்து 52 ஆக குறைத்துள்ள நிறுவனங்கள்

Prathees
2 years ago
இலங்கைக்கான விமானங்களின் எண்ணிக்கை 108 இல் இருந்து 52 ஆக குறைத்துள்ள நிறுவனங்கள்

எரிபொருள் நிரப்பும் வசதிகள் இல்லாமை மற்றும் வருமானம் ஈட்டுவதில் சிக்கல்கள் காரணமாக 7 வெளிநாட்டு விமான நிறுவனங்கள் ஒரு வாரத்தில்  இலங்கைக்கான விமானங்களின் எண்ணிக்கையை 108 இல் இருந்து 52 ஆக குறைத்துள்ளன.

5 விமான நிறுவனங்கள் விமானங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாகவும், 02 விமான நிறுவனங்கள் இலங்கைக்கு வருவதைக் கூட நிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Emirates, Qatar Airways, Etihad, Oman, Air India ஆகியவை இலங்கைக்கான விமானங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதுடன், Saudi Air மற்றும் Kuwait Airways ஆகியவை இலங்கைக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் வாரத்திற்கு 26 விமானங்களை இயக்கி வந்த நிலையில் தற்போது அதை 14 ஆக குறைத்துள்ளது.

கட்டார் ஏர்வேஸ் முன்பு வாரத்திற்கு 35 விமானங்களை இயக்கியது, தற்போது 31 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

திஹாட் நிறுவனம் முன்பு வாரத்திற்கு 14 விமானங்களை இயக்கி வந்த நிலையில் தற்போது அதை 06 ஆக குறைத்துள்ளது.

ஓமன் ஏர்லைன்ஸ் முன்பு வாரத்திற்கு 11 விமானங்களை இயக்கி வந்த நிலையில் தற்போது அதை 07 ஆகக் குறைத்துள்ளது.

ஏர் இந்தியா முன்பு வாரத்திற்கு 09 விமானங்களை இயக்கியது மற்றும் தேவை பலவீனமானதால் அதை 04 ஆக குறைத்தது.

மேலும், வாரத்திற்கு 07 விமானங்களை இயக்கிய சவுதி எயார் நிறுவனமும், வாரத்திற்கு 04 விமானங்களை இயக்கிய குவைத் எயார்வேஸ் நிறுவனமும் இலங்கைக்கான விமான சேவையை இடைநிறுத்தியுள்ளன.

மாலைதீவுகள், கொரியன், சலாம் ஏர்வேஸ், தாய் ஸ்மைல், விஸ்தாரா, சைனா சதர்ன் மற்றும் சுவிஸ் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் நாட்டின் நிலைமை சீராகும் வரை  தங்கள் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.