வெளிநாட்டு நாணயங்களை விற்க – வைப்பிலிட பொது மன்னிப்பு காலம்

Mayoorikka
3 years ago
வெளிநாட்டு நாணயங்களை விற்க – வைப்பிலிட பொது மன்னிப்பு காலம்

பொதுமக்கள் தமது கைவசம் வைத்துள்ள, வெளிநாட்டு நாணயங்களை வைப்பிலிடுவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு ஒரு மாத பொது மன்னிப்பு காலத்தை நிதியமைச்சு அறிவித்துள்ளது.

வெளிநாட்டு நாணயங்களை வங்கித் தொழில் முறைமையினுள் கவர்ந்துகொள்ளும் பொருட்டு இந்த சலுகை அறிவிக்கப்படடுள்ளது

கடந்த 15 ஆம் திகதி முதல் ஒரு மாதத்துக்கு இந்த நடைமுறை அமுலில் இருக்கும்.

இதன்படி, தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கில் அல்லது வர்த்தக வெளிநாட்டு நாணயக் கணக்கில் குறித்த வெளிநாட்டு நாணயங்களை வைப்பிலிட முடியும்.
அத்துடன், உரிமம்பெற்ற வர்த்தக வங்கி அல்லது தேசிய சேமிப்பு வங்கி போன்ற அங்கீகாரமளிக்கப்பட்ட வணிகர்களுக்கு விற்பனை செய்ய முடியும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை அந்நிய செலாவணி திணைக்களத்தின் 0112 477 255, 0112 398 511 என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியுமென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4