இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கை வெளியீடு

Kanimoli
3 years ago
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய  நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கை  வெளியீடு

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய ( ஓகஸ்ட் 18 ) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபா 33 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 70 சதமாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபா 31 சதமாகவும்,அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 68 சதமாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.

ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 445 ரூபா 91 சதமாகவும் அதேசமயம் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை 428 ரூபா 41 சதமாக பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 377 ரூபா 21 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்வனவு விலை 361 ரூபா 89 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4