மலேசியாவின் குவான்டன் விமானப்படைத் தளத்தில் இருதரப்பு கூட்டுப் பயிற்சி ஈடுபடும் இந்தியா-மலேசியா விமானப்படை

#Malasia #India
Prasu
3 years ago
மலேசியாவின் குவான்டன் விமானப்படைத் தளத்தில் இருதரப்பு கூட்டுப் பயிற்சி ஈடுபடும் இந்தியா-மலேசியா விமானப்படை

இந்திய விமானப்படையும், மலேசியாவின் ராயல் மலேசிய விமானப்படையும் பங்கேற்ற முதல் இருதரப்பு கூட்டுப் பயிற்சி மலேசியாவின் குவான்டன் விமானப்படைத் தளத்தில் நடைபெற்றது. 

உதாரா சக்தி என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பயிற்சியில் இந்திய விமானப்படையின் சுகோய் 30-எம்கேஐ, சி-17 ரக விமானங்கள், ராயல் மலேசியன் விமானப்படை எஸ்யூ 30-எம்கேஎம் விமானங்கள் பங்கேற்றன. 

நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சியில் இரு நாட்டு விமானப்படைகளும் இணைந்து வான்வெளி தாக்குதல் பயிற்சி மற்றும் போர் உத்திகளை மேற்கொண்டன. 

பயிற்சியின் நிறைவு விழாவில், சுகோய்-30எம் கேஐ & சுகோய் -30 எம்கேஎம் போர் விமானங்கள் வானில் பறந்து சாகத்தை நிகழ்த்தின. 

இந்தப் பயிற்சி, இந்திய விமானப்படையை சேர்ந்தவர்களுக்கு, ராயல் மலேசிய விமானப்படையின் சிறந்த நடைமுறைகளை அதன் நிபுணர்களுடன் பகிர்ந்து கொள்ளுவது மற்றும் பரஸ்பர போர் திறன்கள் குறித்து விவாதிப்பதற்கான வாய்ப்பையும் வழங்கியது. 

இருநாடுகளிடையேயான நீண்டகால நட்புறவை மேலும் அதிகரிப்பதுடன், பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான வழிகளை மேம்படுத்தி, இருநாட்டு பாதுகாப்பை அதிகரித்துள்ளது என்றும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து இந்திய விமானப்படை குழுவினர், ஆஸ்திரேலியாவின் டார்வின் பகுதியில் நடக்கவுள்ள பிட்ச் பிளாக் -22 விமான பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4