அதிகரிக்கும் கொரோனா தொற்று இறப்பு விகிதம் 35 சதவீதமாக உயர்வு - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

#MonkeyPox #WHO
Prasu
2 years ago
அதிகரிக்கும் கொரோனா தொற்று இறப்பு விகிதம் 35 சதவீதமாக உயர்வு - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று இன்று உலகம் முழுவதும் பரவி மக்களை பெரும் இன்னல்களுக்கு ஆளாக்கியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொற்றினால் பொதுமக்கள் உடல் அளவிலும், மன அளவிலும், பொருளாதார ரீதியாகவும் பல்வேறு விதமான சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். 

இந்த கொரோனா வைரஸ் காரணமாக பொதுமுடக்கங்கள் போடப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டதால் ஓரளவு தொற்றின் தாக்கம் குறைந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸின் திரிபான ஒமைக்ரான் வைரஸ் தொற்று சமீப காலமாகவே உலக அளவில் சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. 

இதன் காரணமாக கடந்த 4 வாரங்களில் 35% இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உலக சுகாதார தலைவர் டெட்ரோஸ் அதோனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று சமீப காலமாகவே வேகமாக பரவி வருகிறது. இதனால் முகக்கவசம், அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை சுத்தமாக வைத்தல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். 

இந்த வைரஸ் பாதிப்பு உலக அளவில் அமெரிக்காவில் 9.3 கோடி பேருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்தபடியாக இந்தியாவில் 4.4 கோடி பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 4 வாரங்களில் 15 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். எனவே பொதுமக்கள் அனைவரும் கொரோனா வைரஸிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளை கண்டிப்பாக செலுத்தி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.