பிரித்தானிய பெண் பிரஜையை நாடு கடத்த முடிவு - தீவிர தேடுதல் நடவடிக்கையில் போலிஸார்

Prasu
2 years ago
பிரித்தானிய பெண் பிரஜையை நாடு கடத்த முடிவு - தீவிர தேடுதல் நடவடிக்கையில் போலிஸார்

போராட்டத்திற்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு காணொளிகளை வெளியிட்ட பிரித்தானியா பிரஜையான கெல்லி பிரஸ்ஸருக்கு அடைக்கலம் வழங்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க குடிவரவு திணைக்களம் நேற்று (18) தீர்மானித்துள்ளது.

கெல்லி பிரஸ்ஸர் மருத்துவ சிகிச்சை பெறுவதாகக் கூறி இலங்கைக்கு வந்து காலி முகத்திடல் போராட்டத்தின் பல்வேறு பிரச்சாரங்களை சமூக ஊடகங்களில் ஒளிபரப்பியதால் புலனாய்வு அமைப்புகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து குடிவரவுத் திணைக்களத்திற்கு தெரியப்படுத்திய திணைக்களம், அவரது விசாவை ரத்து செய்து, கடந்த திங்கட்கிழமைக்கு முன்னர் (15) நாட்டிலிருந்து நாடு கடத்துமாறு அறிவித்திருந்தது.

அந்த உத்தரவுக்கு எதிராக அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை சமர்ப்பித்திருந்த நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் அதனை நிராகரித்திருந்தது.நேற்றைய தினம் (18) அவர் நாட்டை விட்டு வெளியேற நடவடிக்கை எடுக்காததால், கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டு, நாடு கடத்துவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அவர் தங்கியிருப்பதாகத் தெரிந்த பல இடங்களுக்கு பொலிஸார் சென்று சோதனையிட்டனர். எனினும், அவர் தலைமறைவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில், குறித்த பெண்ணுக்கு அடைக்கலம் வழங்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த திணைக்களம் முடிவு செய்துள்ளது. 2019ம் ஆண்டு முதல் கெல்லி பிரஸ்ஸர் இலங்கைக்கு விஜயம் செய்து பல சந்தர்ப்பங்களில் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.