12 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானம் - காஞ்சன விஜேசேகர

Kanimoli
3 years ago
 12 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானம் - காஞ்சன விஜேசேகர

  இலங்கையில் உள்ள 12 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

தேசிய எரிபொருள் அனுமதி (QR) வழிகாட்டுதல்களுக்கு அமைய எரிபொருள் நிலையங்கள் இணங்கத் தவறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதற்கமைய 12 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் கூறினார்.

மேலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும், பொதுமக்கள் தங்கள் முறைப்பாடுகளை பொலிஸ் நிலையங்களில் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4