கொரோனா பரவல் உலகில் 24 சதவீதம் குறைந்துள்ளது- உலக சுகாதார அமைப்பு தகவல்

#Covid 19 #World_Health_Organization
Prasu
2 years ago
கொரோனா பரவல் உலகில் 24 சதவீதம் குறைந்துள்ளது- உலக சுகாதார அமைப்பு தகவல்

கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பரவல் பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி போன்ற தடுப்பு நடவடிக்கைகளால் தற்போது இதன் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். 

இதனால் கொரோனா விதிமுறைகளை மறந்து பொதுமக்கள் சகஜ நிலைக்கு திரும்பி விட்டனர். கொரோனாவுடன் வாழ பழகி விட்டனர். கடந்த வாரம் 54 லட்சம் பேரை கொரோனா தாக்கி உள்ளது. 

இது அதற்கு முந்தையை வாரத்தை விட 24 சதவீதம் குறைவு என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. உலகில் எல்லா இடங்களிலும் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. 

ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பியாவில் கிட்டத்தட்ட 40 சதவீதமும் மத்திய கிழக்கு நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இறப்புகளும் குறைய ஆரம்பித்து இருக்கிறது. 

ஆனாலும் ஆசியாவில் ஒரு சில பகுதிகளில் இன்னும் சாவு எண்ணிக்கை சற்று அதிகமாகதான் உள்ளது. 

இது தொடர்பாக உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசஸ் கூறியதாவது:- கொரோனாவுடன் வாழ வேண்டிய கட்டாய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். 

ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 15 ஆயிரம் பேர் கொரோனாவால் இறந்து உள்ளனர். கொரோனா பரவல் குறைந்தாலும் கடந்த 4 வாரங்களில் இறப்பு விகிதம் 35 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. 

கொரோனா வைரஸ் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை. இதனால் பொதுமக்கள் இதுவரை கடைபிடித்து வந்த முக கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்து கொள்ளுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற நடவடிக்கைகளை கைவிடக்கூடாது. 

இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் உடனே அதனை போட்டுக்கொள்வது நல்லது. 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இது நம்மை மட்டுமல்ல சுற்றி உள்ளவர்களையும் பாதுகாக்கும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!