இந்தியா பாகிஸ்தான் இடையே நல்லுறவு நிலவுவது அவசியமானது” பாகிஸ்தான் பிரதமர் ஷெபாப் ஷெரீப் கருத்து

#Pakistan #PrimeMinister #India
Prasu
2 years ago
இந்தியா பாகிஸ்தான் இடையே நல்லுறவு நிலவுவது அவசியமானது” பாகிஸ்தான் பிரதமர் ஷெபாப் ஷெரீப் கருத்து

பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது. கடந்த 2019 ஆம் வருடம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதனை அடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கைவிட்டால் மட்டுமே அந்த நாடுகளுடன் சமூக உறவை மேம்படுத்த முடியும் என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றது. இந்த சூழலில் இந்தியாவுடன் தானும் நல்லுறவை பேண விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாப் ஷெரீப் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசும்போது பரஸ்பர நம்பிக்கை நீதி சமத்துவம் போன்ற கொள்கை அடிப்படையில் இந்தியாவுடன் அமைதியான உறவு ஏற்படுவதை பாகிஸ்தான் விரும்புகின்றது. ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் மற்றும் காஷ்மீர் மக்களின் விருப்பங்கள் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அமைதியான தீர்வு காணப்பட வேண்டும்.

இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகங்கள் உதவி அளிக்கும் விதமாக பணியாற்ற வேண்டும். மேலும் தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்பட இந்தியா பாகிஸ்தான் இடையே நல்லறவு நிலவுவது அவசியமாகும் என கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!