புதையலில் கிடைத்த பல இலட்சம் ரூபா பெறுமதியான கறுப்பு தங்கம்! திடீரென சுற்றிவளைத்த விசேட அதிரடிப்படை

Kanimoli
3 years ago
புதையலில் கிடைத்த பல இலட்சம் ரூபா பெறுமதியான கறுப்பு தங்கம்! திடீரென சுற்றிவளைத்த விசேட அதிரடிப்படை

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோரக்களப்பு குளத்திற்கருகில் கறுப்பு தங்கத்துடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் நேற்று மாலை கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதையல் அகழ்வில் மீட்கப்பட்ட கறுப்பு தங்கம்
புதையல் அகழ்வில் தோண்டி எடுக்கப்பட்டவை என கூறி கறுப்பு தங்கத்தை விற்க முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே குறித்த 24 வயதுடைய கோமாரி பகுதியை சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சந்தேகநபரிடமிருந்து ரூபா 20 இலட்சம் பெறுமதியான 350 துண்டுகள் அடங்கிய 113.180 கிராம் எடையுடைய ஒரு தொகுதி கறுப்பு பொன்நிற கற்கள் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் திருக்கோவில் பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4