மீன்கள், நண்டுகள் என கடல்வாழ் உயிரினங்களுக்கும் கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்யும் சீனா

#China #Corona Virus
Prasu
2 years ago
மீன்கள், நண்டுகள் என கடல்வாழ் உயிரினங்களுக்கும் கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்யும் சீனா

சீனா நாட்டில் ஜியாமென் என்ற மாகாணம் அமைந்துள்ளது.  இந்த மாகாணத்தில் சமீப நாட்களாக கொரோனா நோய் தொற்று  அதிகரித்துள்ளது. கடலோர நகரமான இங்கு, 50 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில், கொரோனா நோய் தொற்று பரிசோதனை பட்டியலில் கடல்வாழ் உயிரினங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. 

கவச உடைகளை அணிந்துள்ள மருத்துவ ஊழியர்கள், மீன்களின் வாயில் பஞ்சு குச்சியை விட்டு மாதிரிகளை எடுப்பதும், நண்டுகளின் ஓடுகளை திறந்து மாதிரிகளை சேகரித்து வருகின்றனர்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ஆதரவும், எதிர்ப்பையும் பெற்று வருகின்றது. 

சிலர் இது போன்று கடல்வாழ் உயிரினங்களுக்கு கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்வதை விமர்சித்தும், கேலி செய்துள்ளனர். 

ஒரு சிலர், மக்களின் நன்மைக்காக செய்யப்படும் இதை வரவேற்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.  

இந்நிலையில், கடலுக்கு செல்லும் மீனவர்கள் தினமும் ஒரு முறையாவது கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்ய வேண்டும். 

மேலும் கடலில் மீன் பிடித்து விட்டு திரும்பிய பிறகு தனக்கும், பிடித்து வரும் மீன், நண்டுகளுக்கும் தோராய அடிப்படையில் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.