ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மை நோய் தற்போது இந்தோனேசியாவிலும் கண்டுபிடிப்பு

#MonkeyPox
Prasu
2 years ago
ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மை நோய் தற்போது இந்தோனேசியாவிலும் கண்டுபிடிப்பு

ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மை நோய் தற்போது பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது. 

இந்நிலையில், இந்தோனேசியாவில் முதன்முறையாக குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

அண்டை நாடான சிங்கப்பூரில் கடந்த மாதம் முதல் குரங்கு அம்மை பாதிப்பு உறுதியானது. அங்கு ஆகஸ்ட் 5-ம் தேதி வரை 15 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டிருந்தனர். 

மேலும், தென்கிழக்கு நாடுகளான பிலிப்பைன்ஸ், மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.