முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வர்த்தக அமைச்சருடன் முக்கிய சந்திப்பு

Mayoorikka
3 years ago
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வர்த்தக அமைச்சருடன்  முக்கிய சந்திப்பு

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வர்த்தக அமைச்சருடன் இன்றைய தினம் (22)  கலந்துரையாடவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் ஆர்.எம். சரத் ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

வெள்ளை முட்டை ஒன்றுக்கு 43 ரூபா எனவும் சிவப்பு முட்டை ஒன்றுக்கு 45 ரூபா எனவும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயித்து நுகர்வோர் அதிகார சபையினால் அண்மையில் வர்த்தமானி வெளியிடப்பட்டது. 

எனினும்,  குறித்த வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டு, செலவுகளை ஈடு செய்யக் கூடிய வகையில் விலையை நிர்ணயிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது . 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4