கிலோ 300 ரூபாவாக விற்கப்பட்ட அன்னாசி பழத்தின் தற்போதய விலை கிலோ 700 ரூபாவாக உயர்வு

Prasu
2 years ago
கிலோ 300 ரூபாவாக விற்கப்பட்ட அன்னாசி பழத்தின் தற்போதய விலை கிலோ 700 ரூபாவாக உயர்வு

ரசாயன உரங்கள் மற்றும் எண்ணெய்கள் இல்லாததால் அன்னாசி சாகுபடியை தொடர முடியாத நிலை இருப்பதாக அன்னாசி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் அன்னாசி சாகுபடி, வர்த்தகம், ஏற்றுமதி போன்றவற்றில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள், வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக கூறுகின்றனர்.

கண்டி வீதியின் கம்பஹா பிரதேசத்தில் இருந்த எழுபது அன்னாசிக் கடைகளில் இன்று பத்து மட்டுமே எஞ்சியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அன்னாசி சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் உரங்கள் மற்றும் எண்ணெய்கள் பற்றாக்குறையால் விளைச்சல் குறைந்து விலையும் உயர்ந்துள்ளதாகக் கண்டறிந்துள்ளனர்.

அன்னாசிப்பழம் விலை கிடுகிடுவென உயர்ந்து விற்பனை இல்லை.

அன்னாசிப்பழம் கிலோ 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில், தற்போது கிலோ 700 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகிறது.