அர்ஜென்டினாவில் பிறந்த குழந்தைகளை விஷ ஊசி போட்டு கொலை செய்த செவிலியர் கைது

Prasu
2 years ago
அர்ஜென்டினாவில் பிறந்த குழந்தைகளை விஷ ஊசி போட்டு கொலை செய்த செவிலியர் கைது

அர்ஜென்டினா கார்டோபாவில் குழந்தைகள் மருத்துவமனை உள்ளது. இங்கு கடந்த மார்ச் முதல் ஜூன் மாதம் வரை சுமார் 8 குழந்தைகள் பிறந்தது. 

ஆரோக்கியமாக பிறந்த இந்த குழந்தைகள் அடுத்தடுத்து சில நாட்களில் இறந்தது. கடைசியாக இறந்த குழந்தையின் பாட்டிக்கு திடீரென சந்தேகம் எழுந்தது, 

இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியானது. 

அந்த குழந்தைகளின் உடலில் பொட்டாசியம் அளவு அதிகமாகி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளன. அந்த குழந்தைகளுக்கு விஷ ஊசி போட்டதால் தான் உடல்நிலை பாதிக்கப்பட்டதும் தெரிந்தது. 

இது தொடர்பாக ஆஸ்பத்திரி நர்சு பிரெண்டா அகுலேராவை போலீசார் கைது செய்தனர். 

ஆரோக்கியமாக பிறந்த குழந்தையை அவர் ஏன் விஷ ஊசி போட்டு கொன்றார் என்பது தொடர்பாக தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!