ரஷ்யாவில் புதினின் உதவியாளரின் மகள் கார் குண்டு வெடிப்பில் உயிரிழப்பு

Prasu
2 years ago
ரஷ்யாவில் புதினின் உதவியாளரின் மகள் கார் குண்டு வெடிப்பில் உயிரிழப்பு

ரஷியாவை சேர்ந்த மூத்த அரசியல் தத்துவ அறிஞர் அலெக்சாண்டர் டுகின். தீவிர ரஷிய தேசியவாத சித்தாந்தத்தை கொண்ட இவர் அதிபர் புதினின் உதவியாளர் ஆவார். புதினுக்கு மிகவும் நெருக்கமான இவரை ரஷிய ஊடகங்கள் 'புதினின் மூளை' என்றே அழைக்கின்றன. 

புதின் அரசின் எந்தவொரு முக்கிய நடவடிக்கையிலும் அலெக்சாண்டர் டுகினின் தாக்கம் நிச்சயம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

அந்த வகையில் உக்ரைன் மீதான ரஷிய போரை அலெக்சாண்டர் டுகின் தீவிரமாக ஆதரித்து வருகிறார். 

இதனால் அவர் மேற்கத்திய நாடுகளின் கோபத்துக்கு ஆளாகி உள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் அவர் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. 

அலெக்சாண்டர் டுகினின் மூத்த மகள் டார்யா டுகினா. 30 வயதான இவர் ரஷியாவின் முக்கிய பத்திரிகையாளர்களில் ஒருவர் ஆவார். 

தனது தந்தையை போல தீவிர ரஷிய தேசியவாதியான இவர், உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார். 

ரஷியாவின் படையெடுப்பை நியாயப்படுத்தி ஆன்லைனில் தவறான தகவல்களை பகிர்ந்ததாக குற்றம் சாட்டி இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள் டார்யா டுகினா மீது பொருளாதார தடைகளை விதித்தன. 

ஏற்கனவே அவரது தந்தை மீதும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட நிலையில், மேற்கத்திய நாடுகள் தங்கள் மீது பொருளாதார தடைகளை விதித்ததை கவுரவமாக கருதுவதாக டார்யா டுகினா அப்போது தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!