ஒரே சமயத்தில் கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட 18 பேர்- பிரான்சில் அதிர்ச்சி சம்பவம்
Prasu
2 years ago

பிரான்ஸ் நாட்டின் Biarritz கிராமத்தில் இருக்கும் கடற்கரை ஒன்றில் கடல் நீரோட்டம் குறித்து அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்கள். எனினும் சில மக்கள் கடலின் 800 மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டனர். நல்ல வேலையாக அங்கு ஹெலிகாப்டர், ஜெட் ஸ்கீ ரக சிறிய படகுகளை வைத்து மீட்பு படையினர் விரைந்து சென்று அனைவரையும் பாதுகாப்பாக மீட்டுவிட்டனர்.
எனினும், இதனை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் பெரும் பதற்றமடைந்தனர். அனைவரும் மீட்கப்பட்ட நிலையில் 18 நபர்கள் ஒரே சமயத்தில் அலையில் அடித்து செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.



