நேபாளத்தில் பள்ளிக்கட்டணம் செலுத்தாத மாணவனை சரமாரியாகத் தாக்கிய ஆசிரியர்-வழக்கு தொடர்ந்த பெற்றோர்

Prasu
2 years ago
நேபாளத்தில் பள்ளிக்கட்டணம் செலுத்தாத மாணவனை சரமாரியாகத் தாக்கிய ஆசிரியர்-வழக்கு தொடர்ந்த பெற்றோர்

நேபாள  நாட்டில் Chailahi என்ற இடம்  அமைந்துள்ளது. இந்த இடத்தில் பண்டித் பிரம்மதத் பள்ளி  உள்ளது. இந்த பள்ளியில் விஸ்வகர்மா (Chrijesh Vishwakarma) என்ற மாணவன் படித்து வந்துள்ளான். 

சிறுவனின் வயது 13 ஆகும்.  இம்மாதம் 8 ஆம் தேதி, மூக்கிலிருந்து இரத்தம் வடிந்த நிலையில், முகம் வீங்கி, கைகளிலும் காயத்துடன் பள்ளியிலிருந்து வீடு திரும்பியுள்ளான் 

விஸ்வகர்மா. மகனைக் கண்ட பெற்றோர் பதற, விஸ்வகர்மாவின் மாமாவான ஷிவ்குமார் என்ன நடந்தது என விசாரித்த போது, தான் பள்ளிக்கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி அனுபம் பதக் என்ற ஆசிரியர் தன்னைக் கடுமையாகத் தாக்கியதாக விஸ்வகர்மா கூறியுள்ளான்.

உடனடியாக விஸ்வகர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த புதன்கிழமை 17ஆம் தேதி  இரவு அச்சிறுவன் உயிரிழந்துள்ளான். 

தற்போது அனுபம் பகத் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் விஸ்வகர்மாவின் பிரேதப் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள். 

இதற்கிடையில், விஸ்வகர்மாவின் அண்ணனான ராஜேஷ், தான் தன் தம்பியின் பள்ளிக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்திவிட்டதாகவும் 

ஆனால் அது தெரியாமல் ஆசிரியர் அவனைத் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், விஸ்வகர்மாவின் பள்ளிக்கட்டணம் வெறும் 250 ரூபாய்தான்.