கனடாவில் அண்மையில் நிகழ்ந்த கொலைச்சம்பவம் தொடர்பில் ஆபத்தான மனிதராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழர்

Kanimoli
3 years ago
கனடாவில் அண்மையில் நிகழ்ந்த கொலைச்சம்பவம் தொடர்பில் ஆபத்தான மனிதராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழர்

கனடாவில் அண்மையில் நிகழ்ந்த கொலைச்சம்பவம் தொடர்பில் ஆபத்தான மனிதராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழர் ஒருவரை அந்நாட்டு காவல்துறை தேடி வருகிறது.

(வயது34) என்ற தமிழரே தேடப்படுபவராவார்.

கடந்த சனிக்கிழமை (21-08-2022) காலை 11:40 மணியளவில் க்ளென் எவரெஸ்ட் வீதி மற்றும் கிங்ஸ்டன் வீதி பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக வந்த தகவலை அடுத்து காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்த போது ஒரு கட்டடத்தின் முகப்பில் பலத்த காயங்களுடன் ஒருவர் அவதிப்படுவதைக் கண்டனர்.

துணை வைத்தியர்கள் அந்த நபரை அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

ரொறன்ரோவை சேர்ந்த 38 வயதான லியோன் டைரெல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

கொலைச்சம்பவத்துடன் தொடர்புடையவரான ராஜரத்தினம் ஆயுதம் ஏந்தியவராக நம்பப்படுவதாகவும் அவர் வன்முறையாகவும் ஆபத்தானவராகவும் கருதப்படுவதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். அவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4