முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ள மாட்டார்- நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க

Kanimoli
3 years ago
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ள மாட்டார்- நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ள மாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிற்கு பிரதமர் பதவியை வழங்குவது குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியோ அதன் உறுப்பினர்களோ எவ்வித தீர்மானங்களையும் எடுக்கவில்லை.

கோட்டாபய பிரதமர் பதவியை ஏற்பார் என கருதவில்லை
என்ற போதும், அவ்வாறு பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கோட்டாபயவிடம் கோரப்பட்டாலும் அதனை அவர் ஏற்பார் என நாம் கருதவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அரசியல்வாதிகளின் தவறுகளினால் ஜப்பான் போன்ற நேச நாடுகளின் உதவியை பெற்றுக்கொள்ள முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4